சிப்காட் துணை மின்நிலைய பகுதியில் நாளை மின்தடை
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மின் கம்பி மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் 13.6.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் 22 கேவி வடசேரிப்பட்டி பீடரில் அதிக திறன் கொண்ட மின்கம்பி மாற்றும் பணி நடைபெறவுள்ள தால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வடசேரிப்பட்டி, வாகவாசல், இடையப்பட்டி, தர்ஹா, தென்னதிரையன்பட்டி, கேடயப்பட்டி மேக்குடிப்பட்டி, பூங்குடி, புத்தாம்பூர், செம்பாட்டூர், ராஜாகுளத்தூர்
ஆகிய இடங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் / இயக்குதலும் காத்தலும் /கிராமியம்/ புதுக்கோட்டை ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் (ஜூன்.14) புதன்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இராஜகோபால புரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர்,லெட்சுமி நகர், பாரி நகர்,
சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி.
லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் 14.06.2023 – புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய புதுக்கோட்டைநகர்(இயக்கலும், காத்தலும்) உதவி செயற் பொறியாளர் ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வடசேரிப்பட்டி பீடரில் அதிக திறன் கொண்ட மின்கம்பி மாற்றும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி வடசேரிப்பட்டி, வாகவாசல், இடையப்பட்டி, தர்ஹா, தென்னத்திரையன்பட்டி, கேடயப்பட்டி, மேக்குடிப்பட்டி, பூங்குடி, புத்தாம்பூர், செம்பாட்டூர், ராஜகுளத்தூர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும், காத்தலும் உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி, சஞ்சீவிராயர் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.