அறந்தாங்கி அரசு மருத்துமனையில் மாவட்ட தலைமை மருத்துவானை அடிக்கல் நாட்டு விழா..

457

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அறிஞர் அண்ணா மருத்துவமனையில் ரூபாய் 46 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி அடிக்கள் நாட்டுவிழாவில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களுடன் கலந்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை தலைமை மருத்துவமனை தற்போது மருத்துவ கல்லூரி ஆக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து வளர்ந்து வரும் அறந்தாங்கியில் தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்படுகிறது

இந்நிகழ்வின் போது மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அண்ணன் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா MBBS MLA அவர்களும், @@திரு. ST ராமச்சந்திரன் அவர்களும், அறந்தாங்கி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ் கனி அவர்களும், மாநிலங்களவை உறுப்பினர் திரு.MM அப்துல்லா அவர்களும், மற்றும் மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும், மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.