சீறிப்பாய்ந்து வந்த காளைகள்..! அசராமல் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்..!

170

புதுக்கோட்டை
ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன புதுக்கோட்டையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாந்த்தம் புதுப்பட்டி பெரிய கருப்பர் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் என ஆறு சுற்றுகளாக மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து துள்ளி குதித்த காளைகளை, வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.

வீரர்கள் பிடியில் சிக்காமல் துள்ளிக் குடித்து ஓடும் காளைகளுக்கு கட்டில், அண்டா, குக்கர், சேர், டைனிங் டேபிள்,தங்கம், வெள்ளி காசு உள்ளிட்டவை பரிசு பொருட்களாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிய ரசித்தனர்.