வேங்கைவயல் கிராமத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணன் இன்று களஆய்வு பொது மக்களிடம் நேரடி விசாரணை

192

வேங்கைவயல் கிராமம் ஓய்வு பெற்ற நீதிபதி இன்று கள ஆய்வு பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.


இந்த ஒரு நபர் கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா நியமிக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில் இன்று
முத்துக்காடு ஊராட்சி, வேங்கைவயலில் ஒரு நபர் கமிஷன் நீதிபதி சத்தியநாராயணன் பள்ளி வளாகம் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை 2 மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்

உடன் கலெக்டர் ஆர்டிஓ வட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வேங்கைவயல் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டது. பின்னர் பேசிய நீதிபதி சத்யநாராயணன்,” வேங்கை வயல் விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. டி.என்.ஏ பரிசோதனை நாளை நடைபெற உள்ளது,”என்றார்.