மாடு முட்டி இறந்த போலீஸ்காரர் உடலை தூக்கி சுமந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி.

934

கே புதுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இறந்த போலீஸ்காரர் உடலை தூக்கி சுமந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி. உறவினர்கள் பொதுமக்கள் நெகிழ்ச்சி.

அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சபரி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி செய்கிறார்
கே புதுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில்
காளை முட்டி உயிரிழந்த போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் சொன்ன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு நவநீதகிருஷ்ணன் உடலைத் தானே முன்னின்று தூக்கிச் சென்றார். காவல்துறை அணிவகுப்புடன் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அதே பகுதியில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி, இறந்த காவலரின் உடலைத் தூக்கிச் சென்றதைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.