புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

1130

இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை மண்டலம் 04.05.2023 ஆம் தேதி, நேரம் 11.45 (IST) சிறப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பின்படி 06.05.2023 அன்று தென்கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், மேற்படி சுழற்சி 07.05.2023 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், 08.05.2023 அன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூறாவளிக் காற்று மைய வங்கக் கடலை நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரைதிரும்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.