புதுக்கோட்டை மாவட்டத்தில்
தொலைந்து போன 75 மொபைல் போன்களை உரிய நபர்களிடம் வழங்கினார்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே..

55

புதுக்கோட்டை மாவட்டத்தில்
தொலைந்து போன 75 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே..

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் மூலமாக சுமார் ரூ. 15,00,000/- மதிப்புள்ள காணாமல் போன 75 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் கடந்த இரண்டு வாரங்களில் சைபர் கிரைம் போலீசார் மூலம் சுமார் ரூ. 15,00,000/- மதிப்புள்ள காணாமல் போன 75 செல்போன்கள் கண்டுபிடித்து அதனை நேற்று உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களால் வழங்கப்பட்டது. அதேபோன்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் ரூ.55,50,000 மதிப்புள்ள 275 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்கள் செல்போன் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரடியாக வரவழைத்து வெகுமதிகள் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள். மேலும் செல்போன் சம்மந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் உடனடியாக ஒப்படைக்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.