முதலமைச்சர் பயணம் – என்ன திட்டம்?
2024 ஜனவரி 10 & 11 இல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம்
மே 23 ஆம் தேதி முதல் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்.
மே 24 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 350 வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு அரசு – சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் குறித்த களத் தகவல்களைப் பெற ஆர்வமுள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு அங்கு நடைபெறும் மாநாடு துணைபுரியும் என தகவல்.
மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர் 31 ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார். ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஜப்பானில் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார் முதலமைச்சர்.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.
“முதலீட்டாளர்களை சந்தித்து
உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன்”
“புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம்”
சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி..