ஜல்லிக்கட்டு தீர்ப்பு சாதகமாக வழங்கியதை அடுத்து புதுக்கோட்டையில் இனிப்பு வழங்கி திமுக கொண்டாட்டம்

255

தமிழ்நாட்டில்ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற தடை இல்லை என்று தமிழ்நாடு அரசு வாதத்தை ஏற்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வடக்கு மாவட்ட கழக செயலாளர்தலைமையில் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில்,

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுக கழகத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா MBBS அவர்கள்

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னத்துரை நகரக் கழகச் செயலாளர் திரு ஆ.செந்தில் திரு அரு வீரமணி தென்னலூர் திரு பழனியப்பன் நகர் மன்ற துணைத் தலைவர் திரு வியாகத்தள்ளி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் அரசு வழக்கறிஞர்கள் காளையின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு தீர்ப்பு சாதகமாக வழங்கியதை அடுத்து புதுக்கோட்டையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் MLA முத்துராஜா மற்றும் சின்னத்துரை நகர செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் புதிய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட காளைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்துக் கொண்டாடினார்கள்…