புதுக்கோட்டை தொல்லியல் சான்றுகள் புத்தகம் வெளியிடப்பட்டது: தமிழக முதல்வர்

479

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.5.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாட்டின் தொன்மை மரபுகளை வெளிக்கொணரும் வண்ணம் புதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பேராசிரியர் கா. ராஜன், முனைவர் வி.ப. யதீஸ்குமார், முனைவர் முத்துக்குமார் மற்றும் முனைவர் பவுல்துரை ஆகியோர் நூலாசிரியர்களாக இணைந்து எழுதிய ‘தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை வட்டாரம்’ என்ற இரண்டு தொகுதிகள் கொண்ட நூலினை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., தொல்லியல் துறையின் இயக்குநர் (மு.கூ.பொ.) திரு சே.ரா.காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக வட்டார அளவிலான முதல் வெளியீடாக,

புதுக்கோட்டை வட்டார தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில்,

தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை
வட்டாரம்

என்ற நூலினை பேராசிரியர் கா.ராஜன்
தலைமையில்,
முனைவர்.வீ.ப.யதீஸ்குமார்,
முனைவர் முத்துக்குமார்,
முனைவர் பவுல்துரை ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்புத்தகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் சான்றுகளின் வரைபடங்கள் ,
வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி சமீபத்திய தொண்டைமான் நிர்வாகம் வரையிலான
அனைத்துவித வரலாற்று தகவல்களையும் தொகுத்து சான்றுகளின் அடிப்படையில் மிக முக்கியமான ஆவணமாக வெளி வந்திருக்கிறது.

இந்த புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தகம் வெளி வருவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்த மாண்புமிகு நிதி, மனித வளம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி…

கரு.ராசேந்திரன்
தலைவர்,
ஆ.மணிகண்டன்,
நிறுவனர்,
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்