விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது..

355

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கான முன்பதிவு இன்று (18/05/23) வியாழன் காலை 08:00 மணிக்கு தொடங்குகிறது..

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு சென்னை யிலிருந்து 15/09/23 (வெள்ளி) அன்று புதுக்கோட்டை வருவதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. சென்னை வாழ் புதுக்கோட்டை வாசிகள் முன்பதிவு செய்து பயன்பெறுவீர்!

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று வருகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி வெள்ளி கிழமை சென்னை எழும்பூரிலிருந்து புதுக்கோட்டை வருவதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (18/05/23) வியாழன் காலை 08:00 மணிக்கு தொடங்குகிறது.

அன்றைய தினம்(15/09/23)
சென்னை எழும்பூர் – புதுக்கோட்டை ரயில் நேரங்கள்:

1. 12605/பல்லவன் 03:45 Pm(மதியம்)
2. 22661/சேது 05:45 pm(மாலை)
3. 16751/போட்மெயில் 07:15 pm(இரவு)
4. 20681/சிலம்பு 08:25 pm(இரவு)

கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்குமா, சிறப்பு ரயில்கள் இயக்குவார்களா என்று கேட்காமல் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.