புதுக்கோட்டை அருகே ஒலியமங்கலம் கிராமத்தில் அண்ணன் தம்பி நீரில் மூழ்கி மரணம்
பொன்னமராவதி தாலுகா, ஒலியமங்கலம் வட்டம், ஒலியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள எத்தன் வேளாண் கண்மாய் என்ற கண்மாயில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வைரவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சுதா ஆகியோரின் மகன்கள் லோகநாதன் வயது 12 மற்றும் தருண்ஸ்ரீ வயது 8 ஆகிய இருவரும் மேற்படி குளத்தில் கை கால் கழுவ சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.
ஆலங்குடி அருகே 2 சிறுமிகள் உட்பட 3 பேர் பலி காப்பாற்ற சென்ற சித்தப்பாவும் நீரில் மூழ்கி இறந்த பரிதாபம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவம் இன்னும் வடு அறாத நிலையில் மேலும் இது தொடர்கதையாக உள்ளது