புதுக்கோட்டை மட்டங்கால் கிராமத்தில் பலத்தமழை..! வேரோடு சாய்ந்த மரம்..!

296

தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில், காற்றுடன் பலத்த கோடை மழை தற்போது பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வாகை மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

கருப்பூர் கோவில் அருகில் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வாகை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மரத்தை எந்திரங்கள் மூலம் அறுத்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.