புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் அதிதூதர் மைக்கேல் சம்மனசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் அதிதூதர் மைக்கேல் சம்மனசு திருஉருவ கொடியேற்று கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. திருவிழாவில் 9-ம் நாளில் அதிதூதர் மைக்கேல் சம்மனசு உள்ளிட்டவர்கள் திருவுருவத்தை வைத்து தேர்பவனி நடைபெற்றது.
தேர்பவனி மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கும்மங்குளம், ஆலங்குடி, அரசடிப்பட்டி, தவளைபள்ளம், பாத்திமாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
10-ம் நாள்நேற்று காலை சிறுமியர்களுக்கு முதல் திருவிருந்து திருப்பலி அருட்தந்தையர்கள் பங்குத்தந்தை ஆர். கே. அடிகளார் மற்றும் பங்குத்தந்தை கித்தேரி முத்து மற்றும் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகளால் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை கொடி இறக்கம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.