தமிழக அமைச்சரவையில் மாற்றம் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றார் – ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

532

புதிய அமைச்சரானார் டி.ஆர்.பி.ராஜா…!
அதிரடியாக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் ….!

சென்னை :

தமிழக அமைச்சரவையில் இருந்த 35 அமைச்சர்களில் ஒருவர் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா பதவியேற்ற நிலையில் ,ஏனைய நான்கு அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில், இதுவரை மூன்று முறை அமைச்சரவையில் இலாக்காகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது முதன் முறையாக அமைச்சர் பதவியில் இருந்து ஒருவர் நீக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் ,தமிழக அமைச்சரவையின் 35 வது அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி டி.ஆர்.பி ராஜா அமைச்சராக ஆளுநரிடம் பதவி பிரமாணம் செய்து கொண்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவருக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில், மேலும் நான்கு அமைச்சர்களின் இலாகாக்கள் பல்வேறு விமர்சனங்களால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆடியோ விவகாரத்தில் சிக்கிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும் ,தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து , தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், விளம்பரத்துறை அமைச்சராக இருக்கும் சாமிநாதனுக்கு கூடுதலாக செய்தி மற்றும் தமிழ்மொழி வளர்ச்சித் துறையும் ஒதுக்கி அதிகார்வ பூர்வமான அரசு செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ************************************

இலாக்கா மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு..

புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு;

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு;

தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம்!

பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ்;

தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சராக சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்