டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் முழு திருவுருவசிலை: காணொளி காட்சியில் திறந்து வைத்த முதலமைச்சர் …!

577

இந்தியாவிலேயே மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் ,தமிழக சட்ட மேலவையின் முதல் பெண் உறுப்பினருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் முழு திருவருட்சிலையை புதுக்கோட்டையில் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார்.

அடிமைத்தனத்தில் புரையோடிப்போன சமூகத்தைப், புரட்டிப்போட்ட புரட்சி பெண்களில் ஒருவரான முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்த ஊர் புதுக்கோட்டை . எனவே அவரின் பெருமையை பறைசாற்றும் வகையில் ,மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் முழு திருவருட்சிலை அமைக்கப்பட்டது .

தற்போது ,இந்த சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ,காணொளி காட்சி வாயிலாக சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து திறந்துவைத்தார் . இந்நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி மற்றும் மக்கள் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் , புதுக்கோட்டையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு நன்றி தெரிவித்தார்.ஆட்சியருடன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் என ஏராளமானோர் கலந்து கொன்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்