புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.
கறம்பக்குடி அடுத்த சூரக்காடு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது ஆடு இரை தேடி மேய்ச்சலுக்கு சென்றது. எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு கறம்பக்குடி தீயணைப்பு மீட்பு பணி துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருக்கு போராடிய ஆட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். உரிய நேரத்தில் விரைந்து வந்து ஆட்டை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.