விஷ விதையை விழுங்கி உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்றிய முத்துமீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள்

619

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ரெத்தினம் சாவித்திரி தம்பதியினரின் ஒரு வயது குழந்தை விஷ்ணு விளையாடும் போது தவறுதலாக ஊமத்தை விதைகளை சாப்பிட்டுவிட்டார்.

பிறகு குழந்தை விஷ்ணு மிகவும் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு 28-03-2023 அன்று அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சிவப்ரகாஷ் தலைமையிலான குழுவினர் குழந்தை விஷ்ணுவுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரை பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவர் திரு கோகுல ரமணன் குழந்தை விஷ்ணு விஷ விதைகளை சாப்பிட்டு அதிக நேரம் ஆனதால் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாவதை கவனித்து உடனடியாக குழந்தையை தீவிரசிகிச்சை பிரிவுக்கு மாற்றி மருத்துவர் அர்ச்சனா ரமேஷ் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர் மூலம் குழந்தைக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு 48 மணிநேரத்துக்கு பிறகு வெண்டிலெட்டரில் இருந்து எடுத்து என்ற நவீன HFNC இயந்திரம் மூலம் தொடர் சிகிச்சை அளித்து குழந்தை விஷ்ணு நினைவு திரும்பினார் என குழந்தைகள் மருத்துவர் கோகுல ரமணன் தெரிவித்தார்.

சிகிச்சை அளித்த குழந்தைகள் மருத்துவர் கோகுல ரமணன் பேசும்போது குழந்தை விஷ்ணு நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் குழந்தைகளை பெற்றோரின் கண்காணிப்பில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேண்டும் குழந்தைகள் கைக்கு கிடைக்காதவாறு அபாயமான பொருட்களை அப்புற படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்,

மேலும் பேசுகையில் குழந்தை விஷ்ணுவுக்கு HENC எனப்படும் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் கருவி மூலம் சிகிச்சை அளித்ததால் விரைவாக குணம் அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இந்த HFNC கருவி புதுக்கோட்டை மாவட்டத்திலேயே தனியார் மருத்துவமனையில் முத்துமீனாட்சி மருத்துவமனையில் மட்டுமே இருப்பதாகவும் இந்த HFNC கருவி இருந்ததால் குழந்தை விரைவாக காப்பாற்ற பட்டதாக மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இறுதியில் குழந்தையின் பெற்றோர் முத்துமீனாட்சி மனையின் மருத்துவர்கள்

மற்றும் பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.