புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்..

1198

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் 20 முதன்மை கல்வி அலுவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் சிஇஓ எனும் முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மாநிலத்தில் 20 சிஇஓக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடமாற்றத்துக்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பணியிடை மாற்றம்.. தமிழ்நாடு கல்வி துறை அறிவிப்பு.. புதுக்கோட்டை புதிய அலுவலராக மஞ்சுளா அவர்கள் நியமனம்

புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பெரம்பலூருக்கு மாற்றம்.

எம்.மஞ்சுளா (தமிழ்நாடு மாநில பெற்றோர்ஆசிரியர்கழக செயலாளர் சென்னை)புதுக்கோட்டைக்கு நியமனம்.

அதிரடி.. தமிழ்நாட்டில் 20 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்..

இதுதொடர்பான முழுவிபரம் வருமாறு:

அதன் விபரம் வருமாறு:

* திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

* விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுராி, சென்னை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கோவை முதன்மை கல்வி அலுவலர் பபதி சென்னை தொடக்க கல்வி இயக்ககம் துணை இயக்குநராக (நிர்வாகம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* திருச்சி முதன்மை கல்வி அலுவலர் பால முரளி, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்ற உள்ளார்.

* தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், திருச்சி முதன்மை கல்வி அலுவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

* கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலரான புகழேந்தி, திருவாரூர் முதன்மை கல்வி அலுவராக செயல்பட உள்ளார்.

* சேலம் முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வந்த முருகன், கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவராக பணி இடமாற்றப்ப்டடுள்ளார்.

* புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் மணிவண்ணன், பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலராக செயல்பட உள்ளார்.

* தென்காசி முதன்மை கல்வி அலுவலராக செயல்பட்டு வரும் கபீர், சேலம் முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கள்ளக்குறிச்சி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வரி, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் இராமன், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குனராக செயல்பட்டு வந்த ஆறுமுகம் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலரான முத்தையா, தென்காசி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் (சட்டம்) பாலதண்டாயுதபாணி, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னையில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த மஞ்சுளா, புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக பொறுப்பு வகித்த சுமதி, கோவை முதன்மை கல்வி அலுவலராக செயல்பட உள்ளார்.

* சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக பணியாற்றிய குழந்தை ராஜன், ஈரோடு முதன்மை கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் (நிர்வாகம்) திருநாவுக்கரசு, சென்னையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக(சட்டம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.