செங்கோட்டையில் நல்ல பாம்பை கழுத்தில் போட்டபடி டீ குடித்த டெய்லர்

507

செங்கோட்டையில் நல்ல பாம்பை கழுத்தில் போட்டபடி டீ குடித்த டெய்லர்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியை சேர்ந்தவர் ஜப்பார். டெய்லர். இவர் இன்று காலை பார்டர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார்.


அப்போது கடையின் அருகே ஒரு நல்ல பாம்பு நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். அப்போது அங்கு நின்ற ஜப்பார், நல்லபாம்பின் அருகில் சென்று அதனை லாவகமாக பிடித்தார்.


பின்னர் அதன் தலையை ஒரு கையில் பிடித்தவாறு தனது கழுத்தில் போட்டபடி கடையில் டீ வாங்கி குடித்தார். இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். பின்னர் அவர் அந்த நல்ல பாம்பை செங்கோட்டை குண்டாறு பகுதியில் வனப்பகுதியில் விட்டு சென்றார்.