புதுக்கோட்டையில் நாளை மின்தடை

805

புதுக்கோட்டையில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய மின்மாற்றி அமைக்கும் பணிகள் நாளை 29. 04. 2023ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெரும், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, கீழாத்தூர், சூரன்விடுதி, அரையப்பட்டி, பசுவயல், பள்ளத்திவிடுதி, ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று வடகாடு மின் வாரிய செயற்பொறியாளர் எஸ். குமாரவேல் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.