அரசு கிளை அச்சகம், சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது ||
Change of Name Applying Facilities extended to Government Presses at Salem, Virudhachalam, and Pudukkottal
அரசு கிளை அச்சகம், சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
2023-2024 ஆம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்களால்,
“எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககம், சென்னை, மதுரை மற்றும் திருச்சி அரசு கிளை அச்சகங்களில் தற்போது துணை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. மதுரை. திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2) மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசு துரித நடவடிக்கை எடுத்து, அரசாணை (நிலை) எண்.58, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தி (எஅ2-1)த்துறை. நாள் 13.04.2023-ல் அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி 26.04.2023 (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
3) பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை 6-Challan மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறப்படும்.
4) பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
நம் பெயர் மாற்றம் நான்கு வழிகளில் உள்ளது
• நம்வீட்டில் நமக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள், நாம் விரும்புவதுவேறு பெயராக இருக்கும். இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டுபோவோரும் உண்டு. பெற்றோர் வைத்த பெயரை சிலர் மாற்றநினைப்பதும் உண்டு அப்படி மாற்ற வேண்டும் என்றால் அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
• அதே போல் நம் பெயர் சில ஆவணங்களில் தவறாக இருந்தால் அதனை திருத்தம் செய்ய அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
• அதே போல் நாம் நம் பெயரை மாற்றி வைத்து கொண்டாலோ அதனை அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
• அதே போல் சிலர் மதம் மாறி இருப்பார்கள் அவர்கள் தங்கள் பெயரை மாற்ற அரசிதழில் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள் என்ன?
தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
• விண்ணப்பிக்கும் நபர்க்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால்,பதிவுபெற்ற ஒரு மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப்பெற்று இணைக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்கள் தாங்களாகவே
விண்ணப்பிக்கலாம்.
• 18 வயது நிரம்பாதவர்கள் பெற்றோர், பாதுகாவலர் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள் :
பிறப்பு சான்றிதழ் அல்லது கல்விச் சான்றிதழ் நகல்
பிறப்பு அல்லது கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் வயதுச் சான்றிதழ் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படம்
வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை
ரேசன் கார்டு
பெயர் மாற்றம் செய்ய கட்டணம்!
ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.415 மட்டும். தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் அஞ்சல்கட்டணம் ரூ.65. எப்படிச் செலுத்த வேண்டும் +
விண்ணப்பிக்க
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 LD600f முதல் 1.00மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையும் விண்ணப்பிக்கலாம்
அல்லது அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்
அரசு இதழை எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ்பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம்உரிய நபருக்கு அனுப்பப்படும்.