கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி

689

கேரளாவில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது வெடித்து சிறுமி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவில்வமலையைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யஸ்ரீ, மூன்றாம் வகுப்பு படித்துவந்தார். இவரது தாய், கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஆதித்யஸ்ரீ, நேற்று இரவு 10.30 மணியளவில் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.


சிறுமி ஆதித்ய ஸ்ரீ என்ற 8 வயது மாணவி மொபைல் போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென்று மொபைல் போன் வெடித்து சிதறியுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஆதித்ய ஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

சிறுமியின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி செல்போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்த போது, போன் சார்ஜில் போடப்பட்டிருந்துள்ளது.

இந்த சமயத்தில் தான் செல்போன் வெடித்துள்ளது; செல்போன் வெடித்த சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் கேட்டுள்ளது.

அந்தளவுக்கு வெடி குண்டு போல வெடித்து சிதறியுள்ளது; இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.