பெருங்களூரில் புதிய கட்டிடம் திறப்பு விழா: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

231

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருங்களூரில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூபாய் 60.00இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்.

விழாவில் சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ மெய்நாதன் அவர்கள் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திரு எம் எம் அப்துல்லா அவர்கள் வடக்கு மாவட்ட செயலாளர் திரு கே கே செல்ல பாண்டியன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு அவர்கள் .,

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம் சின்னத்துரை புதுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர்கள் திரு மு க ராமகிருஷ்ணன் திரு ஆர் சாமிநாதன் மாவட்ட பொருளாளர் திரு லியாகத்அலி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கழக அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்