சர்வ மதமும் சந்தோஷமே…! இப்தார் நோன்பு திறந்த விஜய் மக்கள் இயக்கம் : புதுக்கோட்டை

341

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பிரபல நடிகர் விஜய் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது . 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டம் விஜய் இடம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, பாதிரியார்கள், கோயில் குருக்கள் என சர்வ மதத்தினரும் கலந்து கொண்டனர். இப்தார் நோன்பு திறக்கும் தொழுகையிலும் அவர்கள் பங்கேற்றனர். பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.