பழிவாங்கும் நோக்கில் பதவிபறிப்பு – காங்கிரஸார் போராட்டம்:புதுக்கோட்டை

148

பழிவாங்கும் நோக்கில் ராகுல் காந்தியின் பதவியை மத்திய அரசு பறித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவருடைய எம்பி பதவியை மத்திய அரசு பறித்தது. இதைத்தொடர்ந்து, பழிவாங்கும் நோக்கில் ராகுல் காந்தியின் எம்.பி.யின் பதவியை பறித்ததாகக் கூறி, பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தை, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதோடு, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.