ஆங்கிலத்தில் அசத்தும் புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள் …!

865

டங் ட்விஸ்ட்டரில் டஃப் கொடுத்து சாதனை…!
புதுக்கோட்டை :

அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதுடன், டங் ட்விஸ்ட்டர் முறையில் தெள்ளத் தெளிவாக பேசி தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் திகழ்வது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 9 ஆண்டுகளாக நுறு சதவீத மாணவர்கள் குறிப்பாக ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேலும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவில் ஆங்கிலத்தில் பேசி அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கிலத்தில் பேசுவது மட்டுமின்றி கடினமான ஆங்கில சொற்களை டங் ட்விஸ்ட்டர் முறையில் தெள்ளத் தெளிவாக சொல்லும் திறன் பெற்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். மேலும் , இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் டைய்ட்டஸ் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுப்பதால், கடினமான வாக்கியங்களை கூட எளிமையாக உச்சரித்து இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வியக்க வைத்துள்ளனர்.