பூனைக்கு மணி கட்டுவது யார்? தொடரும் அரசு போக்குவரத்து கழகத்தின் அலட்சியம்.
பல்லவன் ரயிலில் வந்த பயணி ஒருவரின் குமுறல்!

409

பூனைக்கு மணி கட்டுவது யார்? தொடரும் அரசு போக்குவரத்து கழகத்தின் அலட்சியம்.
பல்லவன் ரயிலில் வந்த பயணி ஒருவரின் குமுறல்!

பயணி கூறியது: “நேற்று முன்தினம் பல்லவன் ரயிலில் சென்னையிலிருந்து புதுக்கோட்டை வந்தேன். வழக்கத்தை விட 05 நிமிடங்கள் முன்னேரே புதுக்கோட்டை ரயில் வந்துவிட்டது. போட்மெயில் ரயில் தாமதம் என்பதால் இரண்டாம் நடைமேடைக்கு வந்தது. புதுக்கோட்டையில் இறங்கிய பயணிகள் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கக்கூடும். நீங்கள் அடிக்கடி இந்த குழுவில் 3 பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினீர்களே என்று அந்த நம்பிக்கையில் தான் புதுக்கோட்டை இறங்கினேன்.

ரயில் நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் ஏறி இறங்கி வெளியில் வந்த பார்த்த போது பேருந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக புறப்பட தயாரானது. சரி என்று ஓடி போய் ஒரு பேருந்தில் ஏறிவிட்டேன். நான் எரிய பேருந்தில் 15 முதல் 20 பயணிகள் ஏறியிருக்கக்கூடும், மற்றொரு பேருந்ததில் ஒரு 15-20 பயணிகள் ஏறியிருக்கக்கூடும். அவசர அவசர குறைந்த அளவு பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு பேருந்துகள் புறப்பட்டன. எதிர் புறத்தில் எதோ ரயில் நிலையத்தின் வெளியே செல்லாமல் வாகங்களால் Block ஆகிவிட்டது. கூடுதலாக ஒரு 5 முதல் 6 பயணிகள் ஓடிவந்து Block ஆகி நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறினர். 100 கணக்கான பயணிகள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்து புறப்பட்டுவிட்டது” இவ்வாறு அந்த பயணி தெரிவித்தார்.

பூனைக்கு மணி கட்டுவது யார்? ரயில் நிலையத்திலிருந்து டெப்போ வுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ஏன் இவ்வளவு அவசரம்? யாருடைய உந்துதலின் பெயரில் இது நடைபெறுகிறது?

ஒன்றுக்கு 3 பேருந்துகள் ரயில் நிலையம் வருகின்றன. பல்லவன் ரயிலில் பயணிகள் சென்னையிலிருந்து 06 மணி நேரம் பயணம் செய்து புதுக்கோட்டை ரயில் நிலையம் வருகின்றனர். சொந்த ஊருக்கு வருபவர்கள் தங்கள் உடமைகளோடு 20 பெட்டிகள் கொண்ட பல்லவன் ரயிலிலிருந்து இறங்கி ஒரு புறம் உள்ள நடைமேடையிலிருந்து மறுபுறம் உள்ள நுழைவாயிலுக்கு அனைத்து பயணிகளும் வெளியில்வருவதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வரை ஆகும். ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தவுடன் பயணிகள் பேருந்தில் ஏறினாலும் ஏறவில்லை என்றாலும் பேருந்துகளை எடுத்து கொண்டு செல்வது என்ன மாதிரியான நடைமுறை என்று புரியவில்லை. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் போக்குவதற்கு வசதி இல்லை என்று பெரும்பாலனோர் திருச்சியில் இறங்கி பேருந்தில் வந்துகொண்டிருந்த பலர் தற்போது தான் புதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையில் புதுக்கோட்டை ரயில் நிலையம் வருகின்றனர்.

அந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக புதுக்கோட்டை போக்குவரத்து ஊழியர்கள் நடந்து கொள்வது எந்தவிதத்தில் ஞாயம். டெப்போ மேனேஜர் பயணிகள் பேருந்தில் ஏறினாலும் ஏறவில்லை என்றாலும் பேருந்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுங்கள் என்ற இப்படி தான் தனது ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குகிறாரா என்று கேள்வி எழுகிறது. ரயில் நிலையம் பேருந்துகள் வருவதே பயணிகளை அழைத்து செல்வதற்காக தான் என்றும் நாம் வேலை பார்ப்பது தமிழ்நாடு அரசுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தவிர ரயில் நிலைய ஆட்டோக்காரர்களுக்காக அல்ல என்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி ரயில் நிலையம் வரும் பேருந்துகளை பயணிகளை முழுமையாக அழைத்து செல்ல ஏற்பாடும் செய்யவும். இதே குற்றசாட்டு பயணிகளிடமிருந்து மீண்டும் வரும் பட்சத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்து புறப்படும் பேருந்துகள் உண்மையிலேயே பயணிகளுக்காக தான் இயக்கப்படுகிறதா என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் விதத்தில் இதே குழுவில் நேரடி ஒளிபரப்பு(Facebook Live) செய்யப்படும் என்று உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளுக்கு ஒரு வேண்டுகோள் இது போல புதுக்கோட்டைபோக்குவரத்து ஊழியர்கள் நடந்து கொள்ளும் போது முடிந்தால் தங்கள் விருப்பத்தின் பெயரில் உங்கள் மொபையில் வீடியோவாக எடுத்து நமது குழுவிற்கு மெசேஜ் அல்லது டெலெக்ராம் குழுவிற்கு அனுப்பலாம். அந்த பிரச்சனைகளை நேரடியாக மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நாம் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது. நன்றி 🙏

Source :Pudukkottai Rail Users