கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் நாடு செலுத்தும் திருவிழா…

455

கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், உடல் முழுவதும் சேறு பூசி வழிபடும் முத்தரையர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிஒன்றியம், கொன்னையூரில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுகிறது.இதில் பூச்சொரிதல்,அக்கினி பால்குடம் மற்றும் நாடு செலுத்துதல்,பொங்கள் விழா மற்றும் காப்புக்கட்டுதல், கும்மியாட்டம், மண்டகப்படி என ஒரு மாதகாலம் திருவிழாகள் நடைபெறுகிறது.


இதில் பக்தர்கள்கள் தங்களின் காணிக்கைகளாக மொட்டை அடித்தல்,அக்கினி இறங்குதல்,பால்குடம் எடுத்தல்,அலகு குத்துதல் போன்றவை செய்துவருவது வழக்கம்.ஆனால் கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆலவயல் நாட்டார்களின் காணிக்கை சற்று மாறுபட்டவை.ஆலவயல் நாட்டு மக்கள் கொன்னையூர் தாயிக்கு ஆதிமுறைப்படி காணிக்கை செய்கின்றனர்.கொன்னையூர் சுற்றுவட்டாரங்களில் சுமார் 30கி.மீ தூரங்களுக்கு மேலுள்ள கிராம மக்கள் கொன்னையூர் தாயை வழிபாடு செய்தாலும்,ஆலவயல் நாட்டார்களின் வழிபாடு மட்டும் ஆதி தொண்மையை குறிக்கும் வகையாக உள்ளது.கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு, தங்கள் உடல் முழுவதும் சேறு பூசி வழிபடும் ஆலவயல் நாட்டு முத்தரையர்கள்;
ஆலவயல் நாட்டு முத்தரையர்கள் தெய்வ வழிபாட்டில் மிகுதியானவர்கள்.அதே சமயம் ஆதி தமிழ்குடியினர்.கொன்னையூர் முத்துமாரியம்மனுக்கு சேறு பூசி வழிபடுகின்றனர்.அதற்க்கு காரணம்:
மாரியம்மன்=மாரி+அம்மன் அதாவது மாரி என்பது “மழை”என பொருள்.

‘மழை’ என்றால் குளிர்ச்சி பொருந்தியது.அம்மா என்பதை அம்மை என்று அழைப்பதும் உண்டு.அம்மை,அம்மை நோய் என்பது வெம்மைத் தன்மையால் ஏற்படுவதாகும்.எனவே மாரியம்மன் ஏன்றால் குளிர்ச்சியும்,வெம்மையும் நிறைந்த தெய்வம் எனலாம். வென்மைக்குப்பின் குளிர்ச்சி தருகின்ற தெய்வம்.அதாவது வெப்பதால் ஏற்படும் வறட்சிக்குப்பின் மழையைத் தந்து செழிக்க செய்யும் தெய்வம் என்று மக்களால் நம்புகிறனர்.

இதை போலவே பங்குனி வெயிலில் அம்மைபட்டு இருந்து,அல்லது வெயில் தாக்கம் தாங்கமுடியாமல் இருந்து அந்த வெம்மையை தாங்க,மண் செழிக்க,குளிர்ச்சி வேண்டுமென கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு வேண்டுதல் செய்து உடல் முழுவதும் சேறு பூசி உடலும்,உள்ளமும் குளிர்ந்து,ஆட்டம்,பாட்டத்துடன் ஆலவயல் நாட்டில் இருந்து கொன்னையூர் தாயை வழிபாடு செய்துவருகின்றனர்.


இதில் இந்த சேறு பூசிவருவதில் கோழி இறகு,வெள்ளைமீசை,பல வண்ணங்களில் பூசிகொண்டு காணிக்கை செய்கினறர்.மேலும் சேறு பூசியவர்களின் மாமன்,மைத்துனர்கள் மீதும் நாடு வரும் பொழுதே தங்களின் உடல்களில் உள்ள சேற்றை சிறிது எடுத்து பக்கத்தில் உள்ளவர்கள் மீதும் பூசுவிடுகின்றனர்.இதில் அனைவரும் சேறு பூசிவருவதற்க்கு சமமான ஒன்றாகவும் நம்பப்படுகிறது.கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தாயின் அருள் பெற அனைவரும் பொங்கல்,நாடு விழாவுக்கு அன்போடு அழைக்கிறோம்.(10-4-2023)
முதல்நாடு-பொன்னமராவதி நாடு முதல் மரியாதை ராஜமணிஈட்டி சேர்வைகள்
மூன்றாவது நாடு-ஆலவயல் நாடு மிராஸ் அம்பலம் அவர்களுக்கு மரியாதை.