புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை (MOCK DRILL), மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, இணை இயக்குநர்(பொ) (மருத்துவப்பணிகள்) மரு.ராதிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
இந்தியாவில் மேலும் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 37,093-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு நோய்த்தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது.
தற்போது தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி வேகமாக அதிகரித்து செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,093 ஆக பதிவாகியுள்ளது.
“தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பு”
சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
“அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம்”
“கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது”
“பாதிப்பு அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும்”
கொரோனா பரவல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
“ஒமிக்ரான் வைரஸ் உயிர் பாதிக்கும் தொற்று இல்லை’
“நான்காவது அலை என இப்போதைக்கு கூற முடியாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்