இதுவரை கேள்விப்படாதது இது

400



காலையில் குழி தோண்டும் போது அவருக்கு தெரியாது.. இந்த குழியில் தான் தன்னுடைய உடலை அடக்கம் செய்வார்கள் என்பது

பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் உள்ளது
அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் செய்யும் சமூக பணிகளில் குழி தோண்டுவதும் ஒன்று..இடைப்பட்ட நாட்களில் ஊரில் யாராவது மரணித்தால் அடக்கம் செய்ய வசதியாக குழி தோண்டி தயாராக வைப்பது வழக்கம்..

அதுபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் குழி தோண்டும் பணியில் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம் எம் நிசாத் என்பவரும் இணைந்து பணியாற்றினார். அபுதாபியில் பணியாற்றி வந்த நிசாத் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளவர் இளைஞர்களின் பணிகளை ஊக்குவிப்பவர்.

குழி தோண்டும் பணி பூர்த்தி செய்து இல்லம் திரும்பிய நிசாத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணித்த சோகம்.. காலையில் நிசாத் தோண்டிய குழியிலேயே மாலை அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டி வந்ததை அடுத்து ஊர் மக்களுக்கு மீளா துயரம்..
இவ்வளவுதான் வாழ்க்கை என்பது தெரியாமலேயே நாட்களை நகர்த்தி வருகிறோம்

இருக்கும் வரை நல்லதை செய்வோம்