புதுக்கோட்டை வழித்தடத்திற்கு 2 புதிய வாராந்திர ரயில்கள் மதுரை கோட்டம் தகவல்!

907

புதுக்கோட்டை வழித்தடத்திற்கு 2 புதிய வாராந்திர ரயில்கள் IRTTC-2022 ஆண்டு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக மதுரை கோட்டம் தகவல்!

கடந்த மார்ச் மாதம் மதுரை கோட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்
திரு. M.m. அப்துல்லா அவர்கள்
1. 07355/56 ஹூப்ளி-ராமேஸ்வரம்-ஹூப்ளி வழி புதுக்கோட்டை ரயிலை நிரந்தர ரயிலாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு மதுரை கோட்டத்தின் பதில்:
IRTTC 2022 ஆண்டு கூட்டத்தில் ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர ரயில் வழி புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூரு, பெங்களுரு இறுதி செய்யப்பட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

2. வண்டி எண்-09419/20 அகமதாபாத்-திருச்சி வாராந்திர ரயிலை புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மதுரை கோட்டத்தில் பதில்:
IRTTC 2022 ஆண்டு கூட்டத்தில் அகமதாபாத் -ராமேஸ்வரம் வாராந்திர ரயில் வழி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ,கும்பகோணம், மயிலாடுதுறை இறுதி செய்யப்பட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த ரயில் 09419/20 அகமதாபாத்-திருச்சி சிறப்பு ரயிலாக (Train On Demand) ஆக இயங்கிவருவதாக தெரிவித்துள்ளது.

புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டபின் அகமதாபாத்-திருச்சி ரயில் முன்மொழிவின்படி புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படும் என்பதை மதுரை கோட்டம் உறுதி செய்யுள்ளதை வெளிப்படுத்துகிறது.

இதன்மூலம் புதுக்கோட்டை வழித்தடத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கர்நாடகா & (மஹாராஷ்டிரா/குஜராத்) மாநிலங்களுக்கு செல்ல புதுக்கோட்டையில் நின்று செல்லும் 2 புதிய வாராந்திர ரயில் சேவைகள் கிடைக்கவுள்ளது எனது குறிப்பிடத்தக்கது.

சிலம்பு ரயிலை இனி தினசரி ஆகாது என்பதை உறுதிபடுத்திய ரயில்வே நிருவாகம்! பல ஆண்டு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி ?

சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே புதுக்கோட்டை வழியாக கடந்த 10 ஆண்டுகளாக வாரம் 3 நாட்கள் இயங்கிவரும் சிலம்பு சூப்பர் பாஸ்ட் ரயிலின் சேவை தினசரியாக மாற்ற மதுரை கோட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் தென்காசி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில்

அனைவருக்கும் மதுரை கோட்டத்தின் பதில்: சென்னை எழும்பூரில் நடைமேடை நெருக்கடி காரணமாக சிலம்பு ரயிலை தினசரி இயக்க சாத்தியமில்லை. அதற்கு பதிலாக தாம்பரம்-செங்கோட்டை இடையே திருவாரூர்-காரைக்குடி இடையே வாரம் 3 நாட்கள் புதிய ரயிலை இயக்கவுள்ளதாக பதில் அளித்து அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட சிலம்பு தினசரி கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ரயில்வே நிருவாகம் என்றே கூறவேண்டும்.

புதுக்கோட்டை பயணிகள் பிற அடிப்படை தேவைகள் குறித்த திருச்சி MP கோரிக்கைக்கு மதுரை கோட்டம்அளித்துள்ள பதில்கள்:

1. பேட்டரி கார்: டெண்டர் கோரியும் எந்த நிறுவனமும் வழங்க முன்வரவில்லை

2. லிப்ட் வசதி: நடைமேடை 1 & 2/3 இல் என 2 லிப்ட்கள் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

3. தேநீர் விடுதி/உணவு விடுதி: அமைக்க டெண்டர் கோரியும் எந்த நிறுவனமும் வழங்க முன்வரவில்லை

புதுக்கோட்டை ரயில் நிலைய பார்க்கிங் கட்டண விவரம்!

இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கு
2-6 மணிநேரம் எனில் 10 ரூபாய் கட்டணம்
12 மணிநேரம் எனில் 15 ரூபாய் கட்டணம்
24 மணிநேரம் எனில் 20 ருபாய் கட்டணம்
மாதாந்திர டிக்கெட் 375/- ரூபாய் என தகவல் தெரிவித்துள்ளது மதுரை கோட்டம்.

Source : Pudukkottai Rail Users