புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருமயம் மற்றும் பொன்னமராவதியில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அவர்கள் காணொலி காட்சி வாயிலாக மூன்று புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி அப்துல் காதர், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி மண்டபத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் முன்னிலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நீதிமன்ற தலைமை, துணை நாசர்,சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், முதுநிலை, இளநிலை கட்டளை பணியாளர், அலுவலக உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், வழக்கறிஞர்கள்,பேரூராட்சி இளநிலை உதவியாளர், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கவுன்சிலர்கள்,பொதுமக்கள் என பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நன்றி: கீரவாணிஇளையராஜா