ஆலங்குடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை: தமிழக அரசு

1008

தமிழக சட்டப்பேரவையில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் 5 இடங்களில் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

மேலும் ரூ. 108.2 கோடியில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விருதுநகர், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலியில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
இதன் மூலம் 6200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சி பகுதியில் ரூபாய் 25.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55ஏக்கர் பரப்பளவில் 2000 பேர் வேலைவாய்ப்பு பெரும் வகையில் “சிட்கோ தொழிற்பேட்டை” அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது