புதுக்கோட்டை நகராட்சியில் புதிய சந்தை அடிக்கல் நாட்டப்பட்டது..

761

இன்று (06-03-2023) புதுக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதி ரூ. 6.42 கோடியில் அமையவுள்ள ‘தினசரி காய்கறி சந்தை’ அடிக்கல் நாட்டப்பட்டது..

புதுக்கோட்டை நகராட்சி வார சந்தையில் ரூ 6.5 லட்சம் கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் மணிக்கு பூமிபூஜை விழா நகராட்சி தலைவர் திலகவதி தலைமையில் இன்று நடைபெற்றது

புதுக்கோட்டை நகரத்தில் பழைய சந்தையை புனரமைப்பு செய்வதற்கு பழைய இடத்தில் இயங்கி வந்த சந்தையை இடமாற்றம் செய்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கபட்டுள்ளது..

புதுக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதி ரூ. 6.42 கோடியில் அமையவுள்ள ‘தினசரி காய்கறி சந்தை’ புதிய ஒருங்கிணைந்த சந்தையாக 150 கடைகள் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது..


இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் s. ரகுபதி.,சிவ.விமெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம் அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகர செயலாளர் ஆ.செந்தில் ஆணையர் நாகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஒப்பந்தக்காரர்கள் SSB ஹாஜா மைதீன் பெருமாள் ஆகியோர் வரவேற்றனர்