திருவப்பூர் கோயிலில் நாளை கொடியேற்றம்…

408

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான திருவப்பூர் முத்துமாரியம்மன் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து மாசிப்பெருந்திருவிழா நாளை (5ம் தேதி) இரவு காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் முத்துராமன்,
கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், ஆய்வாளர் திவ்யபாரதி, கோயில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள்
செய்து வருகின்றனர்.