புதுகை மாவட்ட எஸ்பி அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டையில் எஸ்பி., வந்திதாபாண்டே தலைமையில் தினசரி புகார் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த 2 மாதங்களாக புதன் கிழமைதோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான புகார் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் பெறப்பட்ட 272 புகார்களில் 265புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் முகாமில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், எஸ்பியும் தொலைபேசியில் புகார்தாரரை தொடர்பு கொண்டு போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்கிறார். புகார்தாரருக்கு மனநிறைவு இல்லாத பட்சத்தில், எஸ்பியே நேரடியாக நடவடிக்கையில் ஈடுபட்டு தீர்க்கப்படுகிறது.
மணல் திருட்டு, கஞ்சா, லாட்டரி விற்பனை, சூதாட்டம், ரவுடியிசம் போன்ற சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் எஸ்பி நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட காவல் உதவி எண்கள் 94899 46674, 72939 11100 வாயிலாக புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கும்,எஸ்பி தனிப்படைக்கும் அனுப்பி கண்காணிக்கப்படுகிறது.மாவட்ட காவல் உதவி எண்களில் புகார் தெரிவிப்போரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.