பொன்னமராவதி மார்ச் 31
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது அவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த நிலையாக இருந்து வந்தது இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் பொன்னமராவதி காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், இன்ஸ்பெக்டர் தனபாலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகிய தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமிருந்து இருசக்கர வாகனங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இதில் சிறப்பாக செயல்பட்டதாக பொன்னமராவதி போலீசார்கள் விக்னேஷ்குமார், செந்தில் ,வரதராஜன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நன்றி : செய்தியாளர் AR.சுதாகரன்