புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை : 10.04.23 திங்கட்கிழமை

546

10.4.2023 திங்கள் கிழமை அன்று புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும்  அரசு விடுமுறை.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவிப்பு

புதுக்கோட்டைமாவட்டம்_நார்த்தாமலை_அருள்மிகு_முத்துமாரியம்மன்_கோவில்_பூச்சொரிதல்_விழா #அலை_அலையாய்_திரண்ட_பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா பூச்செரிதலுடன் தொடங்கியது இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை
முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்தாண்டுக்கான திருவிழா நேற்று பூச்செரிதலுடன் தொடங்குகிறது.
இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பூக்களை தட்டுகளில் சுமந்தவாறு சென்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்தும் வேல் குத்தியும் கரும்பு தொட்டில் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர் பின்னர் பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

பின்னர் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதனை தொடர்ந்து 9-ந்தேதி பொங்கல் விழாவும்
10-ந்தேதி (திங்கள்கிழமை) தேர் திருவிழாவும் நடை பெறுகிறது

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். மேலும் தமிழக போக்குவரத்துதுறை சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கீரனூர் போலீசார் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில் பற்றிய வரலாற்று பகுதியைப் பார்ப்போம்

🌿🌹🌿 முத்துமாரியம்மன் கோயில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். கிழக்குப் பார்த்தபடி, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைப்பை கொண்டுள்ளது இத்திருத்தலம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால் கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் கனிவுடன் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் அரவணைத்துக் காக்கிறாள் அம்மன்.

🌿🌹நார்த்தாமலையில் இருந்து 4 கல் தொலைவில் உள்ளது கீழக்குறிச்சி என்னும் கிராமம். இந்த ஊரில் வாழ்ந்து வந்த குருக்கள் ஒருவர், வயலுக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில் தினமும் நடந்து செல்லும் போது குறிப்பிட்ட ஓரிடத்தில் ஏதோ ஒன்று காலில் இடருவதும் இதில் அவர் விழுவதுமாகவே இருந்து வந்தது. இதனால் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களின் உதவியுடன், அந்த இடத்தைத் தோண்டினார் குருக்கள். அந்த இடத்தில் அழகிய அம்மன் சிலை ஒன்று தென்பட்டது. உடனே ஒரு அசரீரி குரல் கேட்டது “அருகில் உள்ள மலையடிவாரத்தில், சிவனார் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு அருகிலேயே எனக்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள். சுற்றியுள்ள ஊர் மக்களை எந்த நோய் நொடியும் தாக்காமல் நான் காப்பாற்றுகிறேன்” என்றது அந்த குரல்.
அதன்படி நார்த்தாமலையின் அடிவாரத்தில் சின்னதாக கோயில் எழுப்பி, அம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். இதையடுத்து அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு முத்துமாரி என்று பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்,

🌿🌹 பெருமைமிக்க நார்த்தாமலையில் குடி கொண்டிருக்கும் முத்துமாரியம்மன், சக்தி மிக்க திருத்தலமாகப் புகழ் பெற்றதற்கு மலையம்மாள் என்ற பெண் காரணம், அப்பெண்மணியை பற்றி பார்ப்போம்,வேட்ட வலம் என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது. வேட்ட வலம் ஊரின் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவள் தான் மலையம்மாள். சிறு வயதில் மலையம்மாளை அம்மை நோய் கடுமையாகத் தாக்கியதால் ஜமீன்தார், மலையம்மாளைத் தூக்கிக் கொண்டு நார்த்தாமலை மாரியம்மன் கோயில் வாசலில் விட்டுச் சென்றுவிட்டார். அம்மை நோயால் தகிக்கும் வெப்பத்தில் தவித்த சிறுமியின் குரல் கேட்டு, கண் திறந்த முத்துமாரியம்மன், மலையம்மாளுக்கு அர