சிவன் கோவில் குடமுழுக்கு – சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் :புதுக்கோட்டை

365

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் உள்ள தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்களில் இருந்து கிறிஸ்வதவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பாரம்பரிய முறைப்படி சீர் எடுத்து வந்தனர்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.