சிங்கப்பூரில் குடியுரிமை பெற இருபவர்களுக்கான முக்கிய செய்தி!

289

சிங்கப்பூர் குடியுரிமை பெற இருபவர்களுக்கான முக்கிய செய்தி!


சிங்கப்பூர்க் குடியுரிமை அல்லது நிரந்தரவாசி விண்ணப்பத்தை மதிப்பிடுவதில் ஆங்கில தேர்வைச் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கருத்தரிப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு சென்ற ஆண்டு 1.05க்குக் குறைந்துள்ளது.

புதிய குடியுரிமை பெறுபவர்கள் சிங்கப்பூர் நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம் என்று அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ, அத்தகைய ஆங்கிலத் தேர்வில் நன்கு தேர்ச்சி பெறாதோர் பெரும்பாலும் இங்கு உள்ளவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத்துணையாக இருக்கக்கூடும் என்று கூறினார்.

இந்நிலையில் குடிநுழைவு அதிகாரிகள் தேர்வுக்குப் பதில் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்வதாக அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.



மேலும் விண்ணப்பதாரருக்குச் சிங்கப்பூரில் குடும்பத்தார் உள்ளனரா, அவர்கள் தேசிய சேவை முடித்திருக்கிறார்களா என்பன போன்ற அம்சங்கள் அதில் அடங்கும் என தெரியவந்துள்ளது.