நல்லிணக்கம் என்றாலே எங்க ஊருதான்: புதுக்கோட்டை

491

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் பழைய பள்ளிவாசல் இருந்த இடத்தில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு இன்று திறப்புவிழா நடைபெற்றது.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பதால் என்னால் இன்று செல்ல இயலவில்லை.

வழக்கம் போல கோயிலில் இருந்தும் சர்ச்சில் இருந்தும் சீர் வரிசைகள் பெறப்பட்டு விழா இனிதே நடந்தேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற
27 தேதி நடை பெறுகிறது
கும்பாபிஷேக விழாவிற்கு இசுலாமிய சமய மக்களுக்கு அழைப்பு விடுவிக்கும் வகையில் ஆலங்குடி பள்ளிவாசல்க்கு சிவாச்சாரியார், இந்து சொந்தங்கள் இன்று வருகை தந்தனர் .

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் நார்த்தாமலை தேர் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைப்பதும் அன்னதானம் அளிப்பதும் நூற்றாண்டுகளாய் நடக்கும் சாதாரண விசயம்!

இது செங்கோட்டைக்கே பாடம் எடுக்கும் புதுக்கோட்டை!!