புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் சம்பந்தமாக ஆய்வு

288

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் சம்பந்தமாக

மாண்புமிகு நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்களின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து இன்று திருச்சி ஜியா புரத்திற்கு வருகை புரிந்த குடிநீர் வடிகால் வாரிய சிறப்பு குழு அதிகாரிகள்

திருச்சி ஜியா புரத்திலிருந்து புதுக்கோட்டைக்கு குடிநீர் வருகை தரும் நீர் நிலை தேக்க தொட்டிகள் மற்றும் புதுக்கோட்டைக்கு குழாய் மூலம் காவேரி குடிநீர் வரும் வழித்தடங்களை ஆய்வு செய்து

அனைத்து பணிகளும் விரைவில் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் புதுக்கோட்டை நகர் பகுதி மக்களுக்கு தேவையான அளவிற்கு குடிநீர் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட அனைத்துப் பணிகளும் செயல்பட்டு வருவதாக

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்களிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.மேலும் விரைவில் பணியை முடித்திடவும் புதுக்கோட்டை நகர பகுதி மக்களுக்கு கோடை காலத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட சென்னை குடிநீர் வடிகால் சிறப்பு அதிகாரிகள் குழுவுடன் கலந்த ஆலோசித்து சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்

இந்நிகழ்வில் புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திருமதி செ திலகவதி செந்தில் அவர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்