உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்

487

உலக துப்பாக்கிச்சுடுதல் – தமிழர் அசத்தல்! ISSF ஷாட்கன் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் | போட்டியின், ட்ராப் ஷூட்டர் பிரிவில், புதுக்கோட்டையை | சேர்ந்த வீரர் ப்ருத்விராஜ் தொண்டைமான் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில், 20/25 புள்ளிகள் பெற்றார்;

ISSF உலக கோப்பையில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்

ஐ.எஸ்.எஸ்.எப். ஷாட்கன் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி கத்தார் நாடு தோஹாவில் நடைபெற்றது.

இதில் இந்தியா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.



இதில் இந்தியா சார்பில் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகன் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசர் பிருத்விராஜ் தொண்டைமான் ட்ராப் ஷூட்டர் பிரிவில் கலந்து கொண்டார்.

இந்த போட்டி பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில், 20/25 புள்ளிகளுடன் பிருத்விராஜ் தொண்டைமான் வெண்கல பதக்கம் வென்றார்.

ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பையில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவாகும்..