புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை:ஆட்சியர் கவிதா ராமு

1954

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1ம் தேதி பணிநாளாக அறிவிப்பு

புதுக்கோட்டை திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான மாசிபெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள்.


9-ம் நாள் திருவிழாவன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள். மாசிப்பெருந் திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அன்று அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1-ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.