இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

370

திருமயம் அருகே இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) பூச்சொரிதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. இதையடுத்து, பல்வேறு கிராமங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பல வண்ண மலர்களை கொண்டு வந்து பக்தர்கள் அம்மனுக்கு சாத்தி வழிபடுவார்கள்.

அம்மனுக்கு சாத்தப்பட்ட மலர்களை நாளை (புதன்கிழமை) விடியற்காலை தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூக்களை பிரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து 20-ந் தேதி திருவிழா தொடங்கி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது.

அன்று மாலை 5 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு கரகம் எடுத்து குடத்தின் விளிம்பில் கத்தி நிற்பதை காணவும், நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை தரிசிக்கவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 30-ந் தேதி திருவிழா நிறைவடைகிறது.