மதுரை இரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

257

இன்று(10/03/23) மதுரை கோட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை இரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். MP களின் கோரிக்கைகள் சுமார் 1 மாதகாலத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் இரயில்வே தரப்பில் அக்கோரிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த விளக்கம் & MP களின் கோரிக்கைகளுக்கான வலியுறுத்துகள் இக்கூட்டத்தில் நடைபெற்றிருக்கும்.

நேற்று திருச்சி கோட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மதுரை கோட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில்
புதுக்கோட்டை தொடர்பாக விவாதிக்கப்பட்ட சில கோரிக்கைகள்.

புதிய ரயில்:

1. ராமேஸ்வரம்-பெங்களூரு இடையே புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக புதிய ரயில்

சேவை அதிகரிப்பு:

2. வாரம் 3 நாட்கள் இயங்கும் ‘சிலம்பு’ ரயிலை தினசரியாக்குதல். மேலும் அதன் பெட்டிகளை அதிகரித்தல்.

3. புதுக்கோட்டை பகுதியில் ரயில் பெட்டிகள் தொழிற்சாலை அமைத்தல்


4. கருவேபிளான் கேட் & திருவப்பூர் கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்டவை.

5. தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயிலை மீண்டும் இயக்குதல்.

6.புதுக்கோட்டை-தஞ்சாவூர் வழி கந்தர்வகோட்டை புதிய ரயில் பாதை திட்டம்.

உள்ளிட்டவை புதுக்கோட்டை தொடர்பாக பிரதானமாக விவாதிக்கப்பட்டவை.

வழக்கம்போல் மதுரையை மையப்படுத்தி புதிய ரயில்கள் கோரிக்கைகளை தென்மாவட்ட பகுதியை சேர்ந்த MPக்கள் வாரிக்குவித்தனர்.