வடமாநில தொழிலாளர்களுடன் புதுக்கோட்டை போலீஸ் எஸ்பி., நேரில் சந்திப்பு…

462

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட சிப்காட்டில் கடந்த ஒரு வருடமாக 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாவட்ட போலீஸ் எஸ்பி., வந்திதா பாண்டே நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார். மேலும் அவர்களுக்கு ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் மாவட்ட காவல் உதவி எண் 9489946674-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.