குடுமியான்மலையில் பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சி…

35

பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்து குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (வியாழக் கிழமை)காலை வேளாண்மை விரிவாக்கசீரமைப்பு திட்டத்தின் கீழ் மரபுசார்

பன்முகத் தன்மை கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்துவது, வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட ரகங்களை காட்சிப்படுத்துதல்,

விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறையின் கருத்துகாட்சி, விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் உழவர் உற்பத்தியாளர்நிறுவனங்கள் உற்பத்தி செய்த மதிப்பு கூட் டிய உணவு பொருட்கள் கண்காட்சி, பாரம்பரிய உணவு திருவிழா, விவசாயிகள் பயிற்சி, மரபுசார் பன்முகத் தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல நிகழ்வுகள் நடக்கிறது.