அரளிப்பாறை ஐல்லிக்கட்டு

109

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் இன்று 06/03/2023 மாசி 22 திங்கட்கிழமை மிகவும் பிரபலமான அரளிப்பாறை மஞ்சு விரட்டு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடைபெறுவது வழக்கம்.
ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் மஞ்சு விரட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழு முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி.,மருத்துவ வசதி அவசர சிகிச்சைப்பிரிவு & அவசர ஊர்தி மற்றும் பாதுகாப்புக்கு காவலர்கள் ,,இவை அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை அரளிப்பாறையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாடுகள் முறையாக பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.லட்சக்கணக்கான மஞ்சுவிரட்டு ரசிகர்கள் அவர் அவர் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சொந்தபந்தங்களுடனும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர் வந்து இருந்த லட்சக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் முதலில் கட்டு மாடுகளும் அதன்பிறகு ஊர் பொதுமக்கள் ஐந்து நிலை நாட்டார்கள் வாணவேடிக்கையுடன் ஜவுளி எடுத்து ஊர்வலமாக வந்தபிறகு ஒவ்வொன்றாக தொழு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.

திருப்பத்தூர் &சிங்கம்புணரி வட்டாட்சியர் தலைமையில் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.